வெள்ளி, மார்ச் 21, 2014

காலை உணவு சாப்பிடாதவர்களின் கனிவான கவனத்துக்கு…

மிரட்டுகிற ட்ராஃபிக், கூடவே வேலைக்குச் செல்லும் அவசரம்! இந்தப் பிரச்னையாலேயே பலபேர் தவிர்ப்பது காலை உணவு. கிடைத்ததை இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொள்ளக்கூட நகரத்தில் இருப்பவர்களுக்கு காலை நேரங்களில் அவகாசம் இருப்பதில்லை. ‘எல்லாம் மதியம் பாத்துக்கலாம்’ என்று அரை டம்ளர் டீயையோ, காபியையோ குடித்துவிட்டு காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடுகிறவர்கள் நம் நாட்டிலேயே கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதே போல, ஆசுவாசமான நேரம், சாப்பிடுவதற்கான வசதிகள் இருந்தும்கூட ‘காலைல நான் எதுவும் சாப்பிடுறதில்லை’ என்று பெருமையாக சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தெளிவாக ஒரு விஷயத்தை அறிவுருத்தியிருக்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு. ‘காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களைவிட 27% அதிகம். ஏற்கனவே இதயக்கோளாறுகள் உள்ளவர்களாக இருந்தால் மரணம் கூட ஏற்படலாம்’.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் (1992-2008) இது தொடர்பான ஆய்வு அமெரிக்காவில் நடந்தது. 45லிருந்து 82 வயதுக்குட்பட்ட 26,902 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பிறகுதான் காலை உணவு சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான ரிஸ்க் அதிகம் என்கிற முடிவுக்கு வந்தார்கள். இந்த முடிவுகள் ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ பத்திரிகையான ‘சர்க்குலர்’ (Circular)ல் விரிவாக வெளியானது.

‘காலை உணவைத் தவிர்ப்பது உடல் பருமனைக் கூட்டும். அதன் விளைவாக கொலஸ்ட்ரால், நீரிழிவு பிரச்னைகள் தோன்றும். ரத்த அழுத்தம் ஏறும். இவையெல்லாம் இறுதியில் ஹார்ட் அட்டாக்கில் கொண்டு வந்துவிட்டுவிடும்’ என்கிறது ஆய்வறிக்கை. புகைப்பிடிப்பவர்கள், சதா வேலை வேலை என்று இருப்பவர்கள், திருமணமாகாதவர்கள், குறைவான உடல் உழைப்பைத் தருபவர்கள், அதிகமாக மது அருந்துபவர்கள் காலை உணவைத் தவிர்த்தால் அவர்களுக்கு மிகக் குறைந்த வயதிலேயே ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள், அவர்களுடைய உடல் உழைப்பு, தூக்கம், செரிமானத் தன்மை, மது அருந்தும் அளவு, அவர்களின் உடல் கூறுகள், எதற்காகவெல்லாம் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள் என ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கில் எடுத்திருக்கிறார்கள் ... மேலும் 

2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

ப.கந்தசாமி சொன்னது…

சரியான அறிவுரை.

கருத்துரையிடுக