சனி, நவம்பர் 02, 2013

இன்றைய சிந்தனைக்கு

காஞ்சிப் பெரியவர் 

உலக வாழ்க்கையில் எல்லோருக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன்பெரிய பதவியில் உள்ளவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால்,அவர்களைக் கேட்டால் தெரியும். அவர்களுக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடு போய்விடும். அவர்கள் மேல்- மாடியில் இருக்கிறார்கள். விழுந்தால் எலும்பு முறிந்து விடும். பிராணனுக்கே(உயிருக்கே) ஆபத்து வரலாம் 
மனுஷனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டு இருக்கிறான். எதற்காக ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். 
வெளியிலிருக்கும் வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசைஒன்று கிடைத்துவிட்டால் அது போதவில்லை. அதனால் வரும் சுகம் தீர்ந்து போகிறது. மற்றொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத்தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக