திங்கள், ஜூலை 29, 2013

அமுத வாக்கு

காஞ்சிப் பெரியவர்

மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய்ச் செய்வது பகிரங்கம்.
தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம்.
தான தர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்கும் தெரியும்படி செய்வதாகும். அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும்.
தியானத்திற்கு துணைசெய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், புலனடக்கம், திருடாமை ஆகியவை. இந்த நற்குணங்களால் மனதை அடக்குதல் கைகூடும்.திருடாமை என்பது பிறர் பொருள்மீது ஆசைப்படாதிருப்பதாகும்.
இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பைப் பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை 'சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல்கின்றன. சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக