வியாழன், ஜூன் 13, 2013

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய....

நம்முடைய அழகை பிரதிபலிப்பது முகம். அத்தகைய முகத்தில் ஏதாவது குறை இருந்தால் முகத்தின் அழகே கெட்டு விடும். மேலும் பெண்கள் முக அழகை பராமரிக்க அழகு நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நம் முகத்தை ஜொலிக்க செய்யலாம். உங்கள் முகம் ஜொலிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை வீட்டிலேயே பயன் படுத்தி பயனடையலாம். அவை.....

* ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

* வாரம் ஒரு முறை வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

* வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

* முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

* பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

* வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

* கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

நன்றி: மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக