வியாழன், ஜூன் 13, 2013

இன்றைய சிந்தனைக்கு

லாவோட்சு
  

வில்லை அதிகமாக வளைக்காதே! உடைந்து விடும். ஆயுதத்தை அதிகமாகக் கூர் செய்யாதே! முனை நீண்ட நாள் தாங்காது. மக்கள் அமைதியாக வாழ முடியாமல் போனதற்குக் காரணம் அதிகமான அறிவு. மிகை(அதிகம் வைத்திருத்தல்) தனி மனிதனுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கும் ஆபத்தானது. தடைச் சட்டங்கள் மிகுதியாக ஆக, ஆக மக்கள் மேலும் வறுமையடைகிறார்கள். கூர்மையான ஆயுதங்கள் குவியக் குவிய நாட்டில் குழப்பங்கள் பெருகுகிறது. தொழில் நுணுக்கம் வளர, வளர வஞ்சகப் பொருள்கள் மிகுதியாகின்றன. சட்டங்கள் பெருகப், பெருகத் திருடர்கள் பெருகுகிறார்கள். எனவே ஞானி கூறுகிறான் "நான் தலையிடுவதில்லை; மக்கள் தாமே திருந்திக் கொள்கிறார்கள்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக