திங்கள், ஏப்ரல் 08, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது
 
 
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
வாய்சோரா வன்க ணவன். (689)

பொருள்: தன் அரசன் சொல்லியனுப்பியதை, வேற்று வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், குற்றமான சொற்களை வாய் சோர்ந்தும் தவறியும் சொல்லாத உறுதி உடையவனாக இருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக