செவ்வாய், ஜனவரி 31, 2012

நாடுகாண் பயணம் - எரித்திரியா

நாட்டின் பெயர்:
எரித்திரியா(Eritrea)

வேறு பெயர்கள்:
எரித்திரிய நாடு 
*தமிழில் எரித்திரேயா என உச்சரிப்போரும் உள்ளனர்.
*எரித்ரியா என்றால் கிரேக்க மொழியில் 'சிவப்பு நாடு' என்று பொருள்.

எல்லைகள்:
மேற்கு - சூடான் 
தெற்கு - எத்தியோப்பியா 
தென்கிழக்கு - டிஜிபோத்தி(சிபூட்டி)
கிழக்கு மற்றும் வடகிழக்கு - செங்கடல் 
கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளாக யேமன்(ஏமன்) மற்றும் சவுதி அரேபியாவைக் கூறலாம். 

தலைநகரம்:
அஸ்மாரா(Asmara)

அலுவலக மொழிகள்:
அரபி மொழி, ஆங்கிலம், திக்ரின்யா(Tigrinya)

ஏனைய மொழிகள்:
திக்ரெ(Tigre), சாஹோ(Saho), பிலென்(Bilen), அபார்(Afar), குனமா(Kunama), நாரா(Nara), ஹிதாரெப்(Hedareb) மற்றும் இத்தாலிய மொழி. 


இனங்கள்:
திக்ரின்யா(Tigrinya) 55%
திக்ரெ(Tigre) 30%
சாஹோ(Saho) 4%
குனமா(Kunama) 2%
ரசைடா(Rashaida) 2%
பிலென்(Bilen) 2%
ஏனையோர்(அபார், பெனி, அமீர், நாரா) 5%


சமயங்கள்:
கிறீஸ்தவர் 62%
சுன்னி முஸ்லீம்கள் 36% 
*மிகச் சிறிய தொகையில் ஜெகோவாவின் சாட்சிகள்(Jehovah's Witnesses), ஏழாம் நாள் திருச்சபை(The seventh day Adventist church), மற்றும் பஹாய் சமயத்தினர்(Bahai faith). இருப்பினும் இச்சிறுபான்மைச் சமயத்தினருக்குப் 'பகிரங்கமாக' வழிபாடு நடத்தும் உரிமை மறுக்கப் பட்டுள்ளது.

கல்வியறிவு:
58%
*சமுதாயத்தின் அரைப் பங்கிற்கு மேற்பட்ட பெண்கள் 4 ஆம் வகுப்பையும், ஆண்கள் 5 ஆம் வகுப்பையும் தாண்டுவதில்லை.

ஆயுட்காலம்:
ஆண்கள் 60 வருடங்கள் 
பெண்கள் 64 வருடங்கள் 

ஆட்சிமுறை:
ஒற்றை ஆட்சியுடன் கூடிய மாகாண ஆட்சி 

ஜனாதிபதி:
இசையாஸ் அவ்வேர்கி(Isaias Afewerki)
*இது 31.01.2012 அன்று உள்ள நிலவரம் ஆகும்.

இத்தாலியிடம் இருந்து சுதந்திரம்:
நவம்பர் 1941


ஐ.நாவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை:
1951

எத்தியோப்பியாவிடமிருந்து விடுதலை:
24.05.1993


பரப்பளவு:
117,600 சதுர கிலோ மீட்டர்கள் 

சனத்தொகை:
5,824,000 (2011 மதிப்பீடு)


நாணயம்:
நக்வ்பா(Nakfa / ERN)

இணையத் தளக் குறியீடு:
.er

சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 + 291 

விவசாய உற்பத்திகள்:
இறுங்கு(கம்பு), பருப்பு வகைகள், காய்கறிகள், சோளம், பருத்தி, புகையிலை, கால்நடைகள், மீன்.

தொழில்கள், தொழிற்சாலைகள், வருமானம் தரும் உற்பத்திகள்:
உணவு பதனிடல், மதுபான உற்பத்தி, துணிவகைகள், ஆடைகள் தயாரிப்பு, சிறு கைத்தொழில் உற்பத்திகள், உப்பு, சீமெந்து.

ஏற்றுமதிகள்:
கால்நடைகள்(ஆடு), இறுங்கு(கம்பு), துணிவகைகள், உணவுகள், சிறு கைத்தொழில் உற்பத்திகள்.


நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
  • எத்தியோப்பியாவிடமிருந்து 30 வருட கால சுதந்திரப் போரின் பின்னர் 1991 ஆம் ஆண்டில் விடுதலை அடைந்தது.
  • 30 வருட கால உள்நாட்டுப் போரில் பலத்த உயிர்ச் சேதம், பொருட் சேதம் ஏற்பட்டது.
  • இந்நாட்டின் பொருளாதாரத்தில் 80% விவசாயத்திலேயே தங்கியுள்ளது. 
  • பணவீக்கம் வருடாந்தம் 18% ஆக அதிகரித்துச் செல்கிறது. இந்நாட்டில் வெளிநாட்டுப் பணத்தை உபயோகித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • நாட்டு மக்களில் 50% மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
  • ஊடகச் சுதந்திரம் சிறிதும் இல்லாத, ஊடகவியலாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் முதலாம் இடத்தில் உள்ளது. ஊடகங்கள் முழுக்க முழுக்க அரசினால் இயக்கப்படும் வட கொரியாவை விடவும் இந்நாடு மோசமான இடத்தில் உள்ளது.சில சர்வதேச நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் வட கொரியாவிற்கு 177 ஆவது இடமும், எரித்திரியாவிற்கு 178 ஆவது இடமும் கிடைத்துள்ளது. ஆபிரிக்கக் கண்டத்தில் தனியார் ஊடகங்கள் இல்லாத ஒரேயொரு நாடு எரித்திரியா ஆகும்.
  • அரசிற்கு எதிராகப் பேசுவோர், இராணுவப் பயிற்சிக்கு தயங்குவோர், நாட்டை விட்டுத் தப்பியோட முனைவோர், சிறு குற்றங்களில் ஈடுபடுவோர் அனைவரும் சிறையில் தள்ளப் படுவர். சிறையில் தள்ளப் படுவோர் பல ஆண்டுகள் நீதி விசாரணை ஏதும் இன்றிச் சிறையில் தள்ளப் படுவர். பழுதடைந்த வாகனங்களின் கண்டெயினர்களே சிறைக் கூடங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்துச் சுதந்திரம் மிகவும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மனித உரிமை நிறுவனங்கள் இந்நாட்டில் இயங்குவதற்கு அனுமதி இல்லை.
  • இந்நாட்டிலிருந்து வேலைகளுக்காக குழந்தைத் தொழிலாளர்களும், பாலியல் தொழிலுக்காகப் பெண்களும் கடத்தப்படுகின்றனர்.
  • இந்நாட்டில் 824 பாடசாலைகளும், 2 பல்கலைக் கழகங்களும்(University of Asmara, Institute of Science and Technology) உள்ளன. 
  • முப்பது வருட சுதந்திரப் போரின் விளைவாக யாவற்றையும் இழந்து வெறுங்கையுடன் நிற்கும் எரித்திரியாவானது வறுமை, வேலை வாய்ப்பின்மை, தொழில் திறமையின்மை, வெளிநாட்டு முதலீடின்மை ஆகியவற்றால் நொந்து நூலாகி ஆபிரிக்காவின் மிக வறிய நாடுகளில் ஒன்றாகக் காட்சி தருகிறது.எரித்திரிய மக்களுக்குச் சுதந்திரம் தந்த பரிசு 'வறுமை' மட்டுமே. 

1 கருத்து:

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

அருமையான பதிவு...உபயோகமான தகவல்கள்.

கருத்துரையிடுக