வியாழன், செப்டம்பர் 01, 2011

வாழ்வியல் குறள் - 10


ஆக்கம்: வேதா இலங்காதிலகம்.
டென்மார்க்.


கல்விச் செல்வம்
லகில் உயர் செல்வம். வாழ்க்கைக்கு
வாய்ப்பாடானது வளமான கல்வியே.
ல்லையற்ற பெருமை, வல்லமை தரும் 
இல்லாமையாகாத கல்விச் செல்வம்.
மின்சாரம் ஒளி தருதல் போல
தன்சாரமாய்க்  கல்வி(அறிவு) ஒளிரும்
ற்றாத கல்வியை ஒருவன் விற்றாலும்,
வெற்று மனிதனாகினாலும் போகாதது.
பாலாவியன்ன பட்டுடை போன்ற அழகு
மேலான கல்வி தரும்.
பெற்ற ஒருவரின் கல்வியால்; குடும்பமும்
உற்றவரும் பயன் பெறுவார்.
கொடுக்கக் கொடுக்க முடிவது பணம்
கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி
நீதியாகக் கற்றபடி ஓழுகாததால் உலகில்
அநீதி மலிந்து நிறைந்துள்ளது.
ல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.
வெட்டினும், கட்டி அடிப்பினும், சுட்டாலும்
பட்டுப் போகாதது கல்வி.
முதாயப் பள்ளங்கள் நிரவும் கல்வியாளன்
சமூகத்துக் கலங்கரை விளக்கமுமாகிறான்.

14 கருத்துகள்:

K.Prasanth, Australia சொன்னது…

Well done

Kumar சொன்னது…

I like reading TO kural thanks Vetha

Seetha சொன்னது…

பணம் இல்லாமலும் வாழ்வை நடத்தலாம். ஆனால் கல்வி இல்லாமல் வாழும் வாழ்வு , வாய் பேசமுடியாத ஊமை வாழ்வது போன்றது,

Nadanagopal, Italy சொன்னது…

மிகவும் அருமை

RAMYA DK சொன்னது…

உங்கள் குறள்கள் மிகவும் அருமை. பாராட்டுக்கள்.

Mathan சொன்னது…

I am very interressing to read.

Mathan சொன்னது…

No body can stolan as yours study. if you are lost all tha moneyand athar thinks. but your study keep in your brain.

T.Nathan, Denmark சொன்னது…

Well said... Your kural is very good.

Indira சொன்னது…

உங்கள் குறள் நன்றாக உள்ளது

Vetha.Elangathilakam சொன்னது…

அத்தனை கருத்துகளுக்கும் மனமார்ந்த நன்றி அன்புள்ளங்களே! ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

Seelan சொன்னது…

Good for every body, thanks

Anu, USA சொன்னது…

Vetha:
I must say that, your talents don't stop with poems and articles... Your talent is equal to the ocean ... Thank you very much for your creations.

R. Chandrakumar சொன்னது…

I like your kural very much... Very good.

vinothiny pathmanathan dk சொன்னது…

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு .செல்வம் படைத்து ஒருவன் வசதியாக வாழ்ந்தால் அது அவனை சார்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் .ஆனால் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு .கல்வி பற்றி அருமையாக சொன்னீர்கள் வேதா அன்ரி.பாராட்டுக்கள்

கருத்துரையிடுக